16 மாத குழந்தையை குத்தி கொன்ற தந்தை

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      உலகம்
baby2018-08-026

வாஷிங்டன்,பெற்ற குழந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்க டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வரும் இந்த தந்தைக்கு பிறந்து 16 மாதமேயான கைக்குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் அந்த குழந்தையின் கழுத்தை அறுத்து பிறகு குழந்தையின் உடலெங்கும் கத்தியால் குத்தி கொன்றுள்ளார் அந்த தந்தை. குழந்தையின் அலறல் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டுக்காரர் தன் துப்பாக்கியால் குழந்தையின் தந்தையின் காலில் சுட்டார்.

இதனால் அந்த தந்தை மயக்கமடைந்து கத்தியுடன் கீழே விழுந்தார்.

அருகில் உள்ளோர் குற்றுயிரும் குலையிருமாக கிடந்த குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடியும் பலன் இல்லை. குழந்தை இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த கொடூர தந்தையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து