சீன ஓட்டல் கட்டிடத்தில் தீ விபத்து: 18 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      உலகம்
china hotal2018-08-26

பெய்ஜிங்,சீனாவின் ஓட்டல் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ்' நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஹெய்லோங்ஜியாங் மாகாணம், சாங்பெய் மாவட்டத்திலுள்ள சொகுசு ஓட்டலில், நேற்று முன்தினம் அதிகாலை 4.36 மணிக்கு ஏற்பட்ட அந்த தீயை விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் காலை 7.50 மணி வரை போராடி அணைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில், விபத்தில் உயிரிழந்த 18 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று குளோபல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து