முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிக தொன்மையான மொழி தமிழ் : மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,நாட்டுமக்கள் அனைவருக்கும் ரக்ஷாபந்தன், ஜென்மாஷ்டமிக்கான என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள். ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது.

தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதில் பாரதத்தில் அனைவருக்குமே பெருமிதம் இருக்கிறது. அதேபோல வேதகாலம் தொடங்கி, இன்று வரை, சமஸ்கிருத மொழியும் ஞானத்தைப் பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது என்பதில் இந்தியர்களான நம் அனைவருக்கும் பெருமிதம் உள்ளது.

 உலக வெப்பமயமாதல் முன்வைக்கும் சவால்களை சமாளிக்கும் உத்திகள் நமது வேதங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளுக்கு இந்தப் பருவமழை எதிர்பார்ப்புகளைக் கொண்டு வந்திருக்கிறது.

சில இடங்களில் மற்ற இடங்களை விட அதிக மழை பெய்திருக்கும் நிலையை இயற்கை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளத்தின் பயங்கரமான வெள்ளத்தால் மக்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம்.

இந்த கடினமான சூழ்நிலையில் தேசம் கேரளத்துக்குத் துணையாக நிற்கிறது. இந்த இயற்கைப் பேரிடரில் காயமடைந்தவர்கள் விரைவாக நலம் பெற வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. மாநில மக்களின் பேரார்வமும், அளப்பரிய ஆற்றலும் கேரளத்தை மீண்டெழச் செய்யும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

பேரிடர்கள் வந்து சென்ற பின்னர் அவை விட்டுச் செல்லும் நாசம் துர்ப்பாக்கியமானது தான் என்றாலும், பேரிடர் காலத்தில் மனிதாபிமானத்தின் காட்சி விரிவதை நம்மால் காண முடிகிறது. விமானப்படை, கடற்படை, தரைப்படை, எல்லையோர பாதுகாப்புப் படை, மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்புப் படை, விரைவுப்படை என அனைவரும் இந்த இயக்கத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.

மக்களவையில் 21 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் ஆணையத்திற்கு இணையாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கான திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படும்.

இந்திய விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் விண்ணை முட்டும் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளின் சான்றுகள். நாட்டிற்காக பதக்கங்கள் வெல்வதில் பெருகிவரும் எண்ணிக்கையில் நமது பெண்களும் இடம் பெற்றிருக்கிறார்கள், இது மிகவும் ஆக்கப்பூர்வமான அறிகுறி.

வரும் 29-ம் தேதியன்று நாம் தேசிய விளையாட்டுகள் தினத்தை கொண்டாடவிருக்கிறோம். இந்த வேளையில் நான் அனைத்து விளையாட்டுப் பிரியர்களுக்கும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து