பெங்களூருவுக்கு வெள்ள அபாயம் கர்நாடக பேரிடர் மைய‌ம் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      இந்தியா
cauvery-water 2017 11 04

 பெங்களூர், வருகிற‌ செப்டம்பர் மாதம் வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் அம்மாநில அரசுக்கும், பெங்களூரு மாநகராட்சி

நிர்வாகத்திற்கும் விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது, 

கேரளா, குடகிற்கு அடுத்து பெங்களூருவில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வருகிற‌ செப்டம்பர் வங்காள விரிகுடா கடலில் உருவாகும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஒரு நாளுக்கு 80 மில்லி மீட்டர் மழை பெய்தால் பெங்களூருவில் வெள்ளம் ஏற்படாமல் சென்று விட வாய்ப்பிருக்கிறது. அதை விட அதிகமாக மழை பெய்தால், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே கர்நாடக அரசும், பெங்களூரு மாநகராட்சி நிர்வாகமும் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கி விட வேண்டும்.

இவ்வாறு பேரிடர் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து