டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு பெயரை மாற்றினாலும் வாக்குகள் கிடைக்காது: கெஜ்ரிவால் கிண்டல்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      இந்தியா
Arvind Kejriwal 2017 06 02

புது டெல்லி,மறைந்த மூத்த பா.ஜ.க. தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பெயரை டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்துக்கு சூட்ட பா.ஜ.க. பரிசீலித்து வருவதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை பயனளிக்காத வாக்கு வங்கி அரசியல் என்று தாக்கியுள்ளார்.

மறைந்த தலைவர் வாஜ்பாயின் பெயரை சில இடங்களுக்குச் சூட்டி பா.ஜ.க. வாக்குவங்கி அரசியல் நடத்துவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது டுவிட்டரில்,

ராம்லீலா மைதானத்தின் பெயரை வாஜ்பாய் பெயராக மாற்றுவதனால் வாக்குகள் விழாது, பா.ஜ.க. பிரதமரின் பெயரை மாற்றினால் ஒருவேளை வாக்குகள் விழலாம்.

ஏனெனில் மக்கள் அவர் பெயரில் வாக்குகள் அளிப்பதில்லை என்று கிண்டல் செய்துள்ளார். ஆனால் டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி, வடக்கு டெல்லி நகராட்சி மேயர் ஆதேஷ் குமார் குப்தா இருவருமே ராம்லீலா மைதானத்தின் பெயரை மாற்றும் உத்தேசம் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து