ஆசிய மகளிர் ஒற்றையர் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Saina qualify semifinal 2018 8 26

ஜகார்தா : ஆசிய விளையாட்டுப் போட்டி பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பிவி சிந்து தகுதி பெற்றனர்.  முதல் காலிறுதி போட்டியில் சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டநானை நேற்று எதிர்கொண்டார். இதில், சாய்னா நேவால் 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம், அவர் மகளிர் ஒற்றையரில் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். சாய்னா நேவால் தனது அரையிறுதி போட்டியில் சீன தைபே வீராங்கனை தாய் ட்ஸூ யிங்கை எதிர்கொள்ளவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து