காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 4 பயங்கரவாதிகள் கைது

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      இந்தியா
terrorists arrested2018-08-26 2

ஜம்மு, காஷ்மீர் மாவட்டம், குப்வாரா மாவட்டம், ஹண்ட்வாராவில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதன் முடிவில் 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஷ்மீர் எல்லை பகுதியில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே கடும் சண்டை நடந்து வருவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

பாகிஸ்தானின் அத்துமீறி தாக்குதல், பயங்கரவாதிகளின் தாக்குதல் போன்றவற்றை இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தி வெற்றி கண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து