ராமேசுவரம் புனித கடலில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு: தமிழகத்தில் விரைவில் வாஜ்பாய் திரு உருவ சிலை நிறுவப்படும். ஹெச்.ராஜா தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
h raja news

  ராமேசுவரம்-  ராமேசுவரம் புனித கடலான அக்னி தீர்த்தம் கடலில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி  நேற்று கரைக்கப்பட்டது.
 மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்ததையடுத்து அவரது அஸ்தி  ராமேசுவரம் பேருந்து நிலையம் பகுதிக்கு தனியார் வாகனத்தில் நேற்று காலை 9 மணிக்கு வருகை தந்தது.அப்பகுதியில் ராமேசுவரம் நகர் பாஜகட்சியின் நிர்வாகிகளும்,தொண்டர்களும் வரவேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.அதன் பின்னர் அப்பகுதியிலிருந்து ஊர்வளமாக ராமேசுவரம் நகர்,திருக்கோவில் மேலரதவீதி,கீழரதவீதி வழியாக புனித கடலான  அக்னி தீர்த்தம் கடல் பகுதி்க்கு வந்து சேர்ந்தன.அங்கு பொதுமக்கள்,கட்சி தொண்டர்கள் மற்றும்  ராமேசுவரத்திற்க்கு வருகை தந்த வெளி மாநில பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகயோர்கள்  அஞ்சலி செலுத்தினர். பின்னர் வாகனத்தில் கலசத்திலிருந்த அஸ்தியை  அக்னி தீர்த்த கடல் கரையில் வைத்து புரோகிதர்கள் வேதம் முழங்க பிண்டம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டனர்.பின்னர் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் கட்சியின் மத்திய,மாநில,நகர் நிர்வாகிகள்,தொண்டர்கள், மற்றும் புரோகிதர்கள்,பக்தர்கள்   அனைவரும் சேர்ந்து 10.30 மணிக்கு  கடலில் அஸ்தியை கரைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர்கள் குப்புராமு,சு.ப.நாகராஜ்,ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன், செயலாளர் ஆத்மா கார்த்திக், கட்சியின் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகள் பவர் நாகேந்திரன், எஸ்.ஆர்.ஜி.ரவிக்குமார்,ராமேசுவரம் நகர் தலைவர் பி.என்.சி.ஸ்ரீதர்,பொருளாளர் ராமச்சந்திரன் உள்பட ஏராளமான் மத்திய,மாநில, மாவட்ட,நகர் நிர்வாகிகளும்,தொண்டர்களும்,ராமேசுவரம் பாவ மடம் நிர்வாகி பஜ்ரங்கதாஸ்பாபா  ஆகியோர்கள் கலந்துகொண்டனர். 
  செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா  தெரிவித்தது.
  வாஜ்பாய் அஸ்தி இன்று காலை 10.30 மணிக்கு தமிழகத்தில் 6 இடங்களில் குறிப்பாக புனித ஆறுகளிலும், கடலிலும் ஒரே நேரத்தில் கரைக்கப்பட்டது. இதன்படி மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அஸ்தியானது சென்னை பெசன்ட்நகரில் அஷ்டலட்சுமி கோவில் அருகில் கடலிலும்,இதேபோல் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கன்னியாகுமரியில் முக்கடல்களும் சங்கமிக்கும் இடத்திலும்,ராமேசுவரம் பினித கடலில்  எனது தலைமையிலும் கரைக்கபட்டது. தமிழகத்தில் வாஜ்பாய் பாதம் பட்ட பகுதிகளில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப வாஜ்பாயின திருஉருவ சிலை அமைக்கபடும்.இது  குறித்து பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் மட்டத்தில் அலோசனை நடத்தப்பட்டு வருகிறது ஆலோசனைக்குபின் திருஉருவ சிலை அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என தெரிவித்தார்.                                                   

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து