முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலில் வெற்றி பெறுவோம் என தினகரன் கூறுவது வேடிக்கை வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என தினகரன் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எதிர்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார்.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆணைக்கிணங்க திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள சிலைமான், எஸ்.புளியங்குளம், விரகனூர், ஆகிய பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மதுரை புறநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.அம்பலம், மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் இரா.முத்துக்குமார், தலைமை தாங்கினார், ஒன்றிய  துணைச்செயலாளர் நிலையூர் முருகன்  ஒன்றிய கழக செயலாளர் ராமகிருஷ்ணன்  திருப்பரங்குன்றம் பகுதி  செயலாளர் பன்னீhசெல்வம், அவனியாபுரம் பகுதி செயலாளர் முனியாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் வி.எஸ்.பூமிபாலகன், முன்னாள் அம்மா பேரவை செயலாளர் கோ.பாரி,  மற்றும்;. கிளைக்கழ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது,
திருப்பரங்குன்றம் தொகுதியில் கழகத்திற்கென்று ஒரு தனி வரலாறு உள்ளது 1973-ல் எம்.ஜி.ஆர்.  முதன்முதலில் கட்சிக் கூட்டத்தை மதுரை மாநகரில்  நடத்த முடிவு செய்யப்பட்ட போது அப்போதிருந்த தி.மு.க.வினர் அதற்கு அனுமதி தர மறுத்த போது முதன் முதலாக அக்;கூட்டத்தினை திருப்பரங்குன்றத்தில் நடத்தி தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அப்படிப்பட்ட கழகத்தின் கோட்டையாக விளங்கும் திருப்பரங்குன்றத்தில் 1957 முதல் 2016 வரை ஏறத்தாழ 14முறை சட்டமன்ற தேர்தலும் 2017ல் இடைத்தேர்தலும் நடைபெற்றது ஆக மொத்தம் 15 முறை நடைபெற்ற தேர்தலில் கழகம் 9 முறை வென்றுள்ளது காங்கிரஸ் இருமுறையும், தி.மு.க. நான்கு முறையும் வென்றுள்ளது
தற்போது 2017ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் கழகத்தின் சார்பில் அம்மாவின் ஆசியுடன் போட்டியிட்ட ஏ.கே.போஸ் 43ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார் இந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்.ஜி.ஆர் மீதும், அம்மா மீதும் மக்கள் அளப்பரிய பற்றும் பாசமும் வைத்துள்ளனர், இதனை எண்ணிப்பாராமல் தி.மு.க.வும் தினகரனும், சில எதிர்கட்சிகளும், நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று ஊடகங்கள் வாயிலாக கழகத்திற்கு சவால் விட்டு வருகின்றனர். அவர்களுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக கூறுகிறேன். நாங்கள் இந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம், தோப்பூரில் 10000 வீடுகள் கொண்ட துணைக்கோள் நகரத்தை உருவாக்கியுள்ளோம் விரைவில் பஸ்போர்ட்டை திருப்பரங்குன்றம் தொகுதியில் உருவாக்க உள்ளோம் இது மட்டுமல்லாது ரூ.35 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளுக்காக முதலமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார். என்று மக்களிடத்தில் நாங்கள் எடுத்துரைப்போம்
ஆர்.கே.நகருக்கே செல்ல முடியாமல் வார்த்தை ஜாலமிடும் டி.டி.வி.தினகரன் இந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது இவர் எந்த சாதனையை சொல்லி மக்களிடத்தில் வாக்கு கேட்பார். ஒரு சாதனையும் செய்யாத எதிர்கட்சிகளெல்லாம் வெற்றி பெறுவோம் என்று  கூறி வருவது ஒரு மாயை ஆகும். மக்களும் இதை ஒரு போதும் நம்ப மாட்டார்கள்  மேலும் இங்கிருக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகள் மக்களிடத்தில் அம்மா அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும் ஏற்கனவே 43,000 வாக்கு வித்தியாசத்தில் இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்றுள்ளோம் தற்போது அதை நாம் இரட்டிப்பு செய்து ஏறத்தாழ ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கழகத்தை வெற்றி பெற வைக்க அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்று அவர் பேசினார்   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து