மறுகட்டமைப்பு செய்ய அதிக நிதி தேவை ஒரு மாத ஊதியத்தை தாருங்கள்: கேரள மக்களுக்கு பினராய் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      இந்தியா
Pinarayi Vijayan 2017 6 1

திருவனந்தபுரம் : கேரளாவை மறுகட்டமைப்பு செய்வதற்கு அதிகமான நிதி தேவைப்படுகிறது, ஆதலால், கேரள மக்கள், தங்களின் ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக அளித்து உதவ வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் கடந்த மே 29-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த மழையால் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதுவரை 400-க்கும் மேற்பட்ட மக்கள் மழைக்குப் பலியாகியுள்ளனர். .

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் நிவாரணப் பணிக்கு  மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்தது. மேலும், பல்வேறு மாநிலங்கள் சார்பாக கேரள அரசுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பல்வேறு மாநில மக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.

இந்நிலையில் நிவாரண முகாம்களில் இருக்கும் மக்களை நேற்று முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று பார்த்தார்.  அதன்பின் திருவனந்தபுரத்தில் ஊடகங்களுக்கு முதல்வர் பினராய் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவில் மழை குறைந்து, வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளையும், பாலங்கள், சாலைகள் கட்டமைப்பு வசதிகளை மீண்டும் மேம்படுத்திட ஏராளமான நிதி தேவைப்படுகிறது. மாநிலத்தின் மறுக்கட்டமைப்பாக கேரளாவில் வாழும் மக்களும், வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களும் தங்களின் ஒருமாத ஊதியத்தை மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அளிக்க வேண்டும்.

நம்முடைய வலிமையை கண்டறிவதுஅவசியம். அனைத்து மக்களாலும் ஒரு மாத ஊதியத்தை அளிப்பது கடினம். ஆதலால், கேரளாவில் வசிக்கும் மக்களும், வெளிநாட்டில் வசிப்பவர்களும் ஒவ்வொரு மாதத்தில் 3 நாட்கள் ஊதியத்தை மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து