ஆசியப் போட்டி: தமிழக வீரர் வெண்கலம் வென்றது செல்லாது என அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
sport2018-08-26

ஜகார்த்தா,ஆசியப் போட்டியின் ஆடவர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் லக்ஷ்மணன் வெண்கலம் வென்றது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆசியப் போட்டியின் 8-வது நாளான நேற்றைய ஆடவர் பிரிவில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட தமிழக வீரர் கோவிந்தம் லஷ்மணன் 10 ஆயிரம் மீட்டர் தூரத்தை 29 நிமிடம், 44 விநாடிகளில் (29: 44.91) கடந்து வெண்கலம் வென்றார் என முதலில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், லக்ஷ்மணன் ஓட்டப்பந்தய தடத்திற்கு வெளியே கால் வைத்து விட்டதால் தகுதியிழப்பு செய்யப்பட்டதாவும், இதையடுத்து அவர் வெண்கலம் வென்றது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து