அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      உலகம்
usa2018-08-27

வாஷிங்டன்,அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ஜாக்சன்வில் நகரில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, அந்நகரில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக சுட்டதில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அவனை சுற்றி வளைத்த போது தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமை சீராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து