முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளவுத் துறை தலைவர், அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்க ஆப்கன் அதிபர் மறுப்பு

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

காபூல்,ஆப்கன் உளவுத் துறை தலைவர் மற்றும் அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்க அதிபர் அஷ்ரப் கனி மறுத்து விட்டார்.

தலைநகர் காபூல் உள்ளிட்ட பல நகரங்களில் தலிபான்களின் தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, போலீசார், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களை குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களை கனி தலைமையிலான அரசு கட்டுப்படுத்த தவறியதாக பரவலாக புகார் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், உளவுத் துறை தலைவர், உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் தமது பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை அதிபர் கனிக்கு  அனுப்பி வைத்தனர். அவர்களின் ராஜினாமாவை பரிசீலனை செய்த அதிபர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

பாதுகாப்பு துறை அமைச்சர் தாரிக் ஷா பஹ்ராமி, உள்துறை அமைச்சர் வெயிஸ் அகமது பர்மாக் மற்றும் உளவுத் துறை தலைவர் மஸும் ஸ்டென்கிஸாய் ஆகியோரின் ராஜினாமா கடிதங்களுக்கு அதிபர் அஷ்ரப் கனி ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து, அவர்கள் அனைவரும் தத்தமது பணிகளில் தொடர்ந்து ஈடுபட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்கு தேவையான அத்தியவசியமான அறிவுரைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து