முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராக பெனாசிரின் கணவருக்கு சம்மன்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      உலகம்
benazir2018-08-27

இஸ்லாமாபாத்,முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி ஜர்தாரிக்கு அந்த நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு பிறப்பித்துள்ள உத்தரவில், ரூ. 3,500 கோடி பண மோசடி மற்றும் போலி வங்கிக் கணக்குகள் குறித்த வழக்கு விசாரணையில் பங்கேற்பதற்காக, ஜர்தாரியும், அவரது சகோதரி பர்யாலும் நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து