ஜிம்பாப்வே அதிபராக மீண்டும் எமர்சன் நங்கக்வா பொறுப்பேற்பு

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      உலகம்
Nangkawa2018-08-27

ஹராரே,ஜிம்பாப்வேயில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற சர்ச்சைகக்குரிய தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தற்போதைய அதிபர் எமர்சன் நங்கக்வா, மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வந்த ராபர்ட் முகாபே போட்டியிடாமல் முதல் முறையாக அந்தத் தேர்தல் நடைபெற்றிருந்தாலும், அதிலும் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தச் சூழலில், நாட்டின் அதிபராக அவர் தற்போது மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து