ஜப்பானில் பிரதமர் பதவிக்கு ஷின்ஸோ மீண்டும் போட்டி

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      உலகம்
Shinzo2018-08-27

டோக்கியோ,ஜப்பானில் அடுத்த மாதம் 20-ம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவிருப்பதாக அந்த நாட்டின் தற்போதைய பிரதமர் ஷின்ஸோ அபே அறிவித்துள்ளார்.

இதற்காக, ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக அவர் விரைவில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷின்ஸோ அபே இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜப்பானில் மிக நீண்ட காலத்துக்கு பிரதமராக இருந்தவர் என்ற பெருமையைப் பெறுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து