ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      உலகம்
Earthquake2018-08-27

டெஹ்ரான்,ஈரானில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

ஈரானில் கெர்மன்ஷா மாகாணத்தில் ஈராக் எல்லையை ஓட்டிய பகுதியில் அமைந்துள்ள டாசியாபாத் நகரில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியது. இதனால் அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்துக்கு 2 பேர் பலியானதாகவும், 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து