முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டைட்டானிக் கப்பலில் பயணித்தவரின் கைக்கடிகாரம் 57,500 டாலருக்கு ஏலம்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

டல்லாஸ், டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவரின் சட்டைப் பாக்கெட்டிலிருந்த அவரது கைகடிகாரம் 57,500 டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் சவுத்தாம்டனிலிருந்து 1921-ல் மிக பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான டைட்டானிக் புறப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்கு சென்று சேர வேண்டிய கப்பல் அட்லாண்டிக் கடலில் வழியிலேயே பனிப் பாறையின் மீது மோதி உடைந்து மூழ்கியது.

அதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் சினாய் கண்டோ எனும் பயணியும் ஒருவர். உயிரிழக்கும்போது அவரது வயது 34.

கண்டோர் ரஷ்யாவிலிருந்து புலம் பெயர்ந்தவர். பனிப்பாறையில் கப்பல் மோதிய பின், தனது மனைவி மரியாமுடன், படகு பெறுவதற்கான முயற்சியில் இறங்கிய போது அட்லாண்டிக் கடலின் ஐஸ்நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார்.

அட்லாண்டிக் கடலிலிருந்து அதன் பின்னர் கண்டோரின் உடல் மீட்டெடுக்கப்பட்டது. அவர் நியூயார்க்கில் புதைக்கப்பட்டார். பாக்கெட் கடிகாரம் மரியம் மற்றும் சினாய் கண்டோரின் நேரடி வம்சாவளி மூலம் விற்கப்பட்டது.

பழம்பொருட்கள் சேகரிப்பாளர் ஒருவர் இக் கைக்கடிகாரத்தை 57,500 டாலருக்கு வாங்கியுள்ளதாக புராதனப் பொருட்களை ஏலம் விடும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து