2-ம் உலகப் போரின் போது வீசப்பட்ட அணுகுண்டு ஜெர்மனியில் கண்டுபிடிப்பு18,500 பேர் அவசரமாக வெளியேற்றம்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      உலகம்
WWII bomb2018-08-27

பெர்லின்,ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட அணுகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சுற்றி மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் மொத்தமாக 18,500 பேர் வெளியேற்றப்பட்டார்கள்.வெடிகுண்டு செயலழிக்க செய்த பின்னர் அவர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாம் உலகப்போரின் போது உலக நாடுகளின் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகள் இப்போதும் பல வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைத்து இருக்கிறது.

இந்த நிலையில் ஜெர்மனியில் பிராங்பார்ட் என்ற பகுதியில், பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு கட்டிட பணி ஒன்றுக்காக குழி தோண்டிய போது, இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்கா ஜெர்மனி மீது வீசிய குண்டாகும். 70 வருடம் தாண்டியும் இந்த குண்டு இன்னும் வெடிக்காமல் உள்ளது.

இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் எல்லோரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார்கள். அந்த பகுதியை சுற்றி மூன்று கிலோ மீட்டருக்கு இருக்கும் மக்கள் மொத்தமாக 18,500 பேர் வெளியேற்றப்பட்டார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதன்பின் இந்த குண்டை தரையில் இருந்து எடுக்கும் பணி தொடங்கியது. இதன் எடை 500 கிலோ கிராம் ஆகும். இந்த குண்டு விமானத்தில் இருந்து வீசப்பட்டு இருக்கிறது. ஏதோ கோளாறு காரணமாக இந்த குண்டு வெடிக்காமல் போய் உள்ளது.

இதனால் இதை அகற்ற வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார். நான்கு வெடிகுண்டு நிபுணர்கள் இதை செயலலிக்க செய்தனர். 2 மணி நேரத்திற்கு பின் மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் ஜெர்மனியில் இன்னும் நிறைய வெடிகுண்டுகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து