மலிவு விலை மருந்து உறைகளில் பிரச்சாரம் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      இந்தியா
tablet2018-08-27

புது டெல்லி, மத்திய அரசின் மலிவு விலை மருந்துகளின் உறையில் பா.ஜ.க. தனது கட்சியின் பெயரை முன்னிறுத்துவதாகப் புகார் கிளம்பியுள்ளது. இதன்மூலம், மக்களின் பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ஜன் ஸ்வஸ்தா அபியான், அகில இந்திய மருந்து நடவடிக்கை குழு ஆகிய அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறையின் சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதான் மந்திரி ஜனவுஷதி யோஜ்னா என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், ஜெனரிக் மருந்துகள் மலிவு விலையில் பொதுமக்களுக்காக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாரதிய ஜனதா, மலிவு விலை மருந்து உறைகளில், பா.ஜ.க. எனத் தங்கள் கட்சியின் பெயரை முன்னிறுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அகில இந்திய மருந்து நடவடிக்கை அமைப்பின் இணை அமைப்பாளரான எஸ்.ஸ்ரீநிவாசன் கூறும் போது,

மருந்து உறைகளில் இதுபோல் பல வருடங்களாக, தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதை எங்கள் உறுப்பினர் சமீபத்தில் கண்டறிந்தார். இந்த மருந்து உறைகள், பா.ஜ.க.வின் நிதியில் மலிவு விலை மருந்துகள் மக்களுக்குக் கிடைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.

இதை உடனடியாக அரசு திரும்பப்பெறவில்லை எனில், நீதிமன்றத்தை அணுக வேண்டி இருக்கும் எனத் தெரிவித்தார்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து