உத்தரகண்ட் மாநில கவர்னராக பேபி ராணி மௌர்யா பதவியேற்பு

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      இந்தியா
baby-rani-maurya 2018 8 27

டேராடூன் : உத்தரகாண்ட் மாநில கவர்னராக புதிய ராணி பேபி மௌர்யா பதவியேற்றார்.

டேராடூனில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அவருக்கு பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் உத்தரகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) ராஜீவ் சர்மா செய்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், மாநில அமைச்சர்கள், உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

உத்தரகாண்ட் கவர்னராக இருந்த கிருஷ்ண காந்த் பாலின் பதவிக் காலம் அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, புதிய கவர்னராக ராணி பேபி மௌர்யா கடந்த 21-ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர், உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாநகராட்சியின் மேயராக பதவி வகித்தவர்.

உத்தரகண்ட் மாநில கவர்னராகபதவியேற்ற பின், செய்தியாளர்களுக்கு மௌர்யா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே எனது நோக்கமாகும். மேலும், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்துவேன். குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வேன் என்றார்.

 

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து