நவீன தொழில்நுட்பத்தை அறிய ஜார்க்கண்ட் விவசாயிகள் 26 பேர் இஸ்ரேல் பயணம்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      இந்தியா
Raghubar Das2018-08-27

ராஞ்சி, இஸ்ரேலுக்குச் சென்று நவீன விவசாய தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்காக ஜார்கண்ட் விவசாயப் பிரதிநிதிகள் 26 பேரை அம்மாநில முதல்வர் ரகுவர் தாஸ் வழியனுப்பி வைத்தார்.

இதுகுறித்து முதல்வர் தாஸ் தெரிவித்ததாவது:

தற்போது விவசாயிகள், நீர்ப்பாசன வசதியின்றி பெரிய சவாலை சந்தித்து வருகிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரு வருடத்தில் ஒரு பயிர் மட்டுமே பயிரிடும் நிலையே உள்ளது. இஸ்ரேல் நாட்டில் இதே போன்ற பிரச்சினைகள் உள்ளன.

ஆனால் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி இப் பிரச்சினைகளை அந்நாட்டு மக்கள் சமாளித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டிலிலிருந்து பயிற்சி பெற்று திரும்பும் விவசாயிகள், மற்ற விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான மாஸ்டர் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு ஹைடெக் பண்ணைய தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவை வழங்கும் பொறுப்புகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து