முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரு நினைவகத்தை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் பிரதமருக்கு மன்மோகன் சிங் கடிதம்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

 புது டெல்லி,டெல்லியில் உள்ள முன்னாள் பிரதமர் நேரு நினைவகத்தை மாற்ற மத்திய அரசு முயலுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டின் முதல் பிரதமர் நேரு வசித்த தீன் மூர்த்தி பவன், அவரது மறைவுக்கு பிறகு, நேரு நினைவகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு, அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில், தீன் மூர்த்தி பவனில், நேரு மட்டுமின்றி அனைத்து பிரதமர்களின் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அக்கட்சியைச் சேரந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு இதுதொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.அதில், ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியத்துக்கும், வரலாற்றுக்கும் மதிப்பளித்து அவரது நினைவகம் தொடர்ந்து செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

நேருவின் புகழை அவரது கொள்கைகளை எதிர்த்தவர்கள் கூட ஏற்றுக் கொண்டனர். நாட்டின் முன்னேற்றத்தில் மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் பெரும் பங்காற்றியவர் நேரு. அவரது தாக்கம் இன்றளவிலும் உலக நாடுகளிடையே உள்ளது.

தீன் மூர்த்தி பவனில் மாற்றம் செய்ய மத்திய அரசு முயலுவதாக தெரிகிறது. அனைத்து பிரதமர்களின் நினைவிடமாக உருவாக்க 270 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது மிகவும் வருத்தமளிக்கும் செயல். எனவே இந்த அரசும் நேருவை மதித்து அவரது நினைவிடம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதில் மாற்றம் செய்யும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது என மன்மோகன்சிங் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து