முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளூமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: அமர்தியா சென்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளூமன்ற  தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்தியா சென் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் கூறியதாவது:

சர்வாதிகார ஆட்சிக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சர்வாதிகாரப் போக்கை நாம் எதிர்த்து போராட வேண்டும். வகுப்பு வாத சக்திகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை நாம் விமர்சிக்க வேண்டும். 31 சதவீத வாக்குகளைப் பெற்று கடந்த 2014-ஆம் ஆண்டில் தவறான நோக்கத்துடன் வகுப்புவாத கட்சி ஆட்சிக்கு வந்தது.

55 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், அக்கட்சி பெற்றது 31 சதவீத வாக்குகள் மட்டுமே. வகுப்புவாத சக்தியை தடுத்துநிறுத்த கம்யூனிஸ விதையை விதைக்க வேண்டும். நீண்ட காலத்துக்கு அதன் பலனை நாம் அறுவடை செய்யலாம். ஜனநாயகம் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. மக்களால்தான் இந்த நிலையை மாற்ற முடியும்.

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தேசவிரோத குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதுபோன்ற குற்றச்சாட்டுகளில் ஒன்றுகூட நிரூபிக்கப்படவில்லை. இப்போது மாணவர்கள் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர். நாளடைவில் நாட்டுமக்களும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

இடதுசாரி கட்சிகள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பே திரிணமூல் காங்கிரஸ் கட்சி போராட்டங்களை முன்னெடுத்தது. இடதுசாரி கட்சிகள் மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக குரல் கொடுக்க வேண்டும். பல கட்சிகள் இன்றி ஜனநாயகம் செயல்படாது. ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் சர்வாதிகாரத்துக்கு உதாரணமாக ஜனநாயகம் மாறிவிடும் என்று அமர்தியா சென் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து