தேர்தல் நடைமுறைகளை சீர்குலைக்க சமூக ஊடகங்களை அனுமதிக்க மாட்டோம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      இந்தியா
Ravi Shankar Prasad 2017 11 27

 புது டெல்லி, அர்ஜென்டினாவின் சலடா நகரில் ஜி-20 நாடுகளின் மின்னணு பொருளாதார அமைச்சகங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும் காலத்தில் தேர்தல் நடை முறைகளைச் சீர்குலைப்பதற்காக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதிபட தெரிவித்தார்.

இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசியதாவது:-

இந்தியாவில் சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு சமூக ஊடகங்களை கடந்த சில மாதங்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவற்றை தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங் களை, பிரிட்டனைச் சேர்ந்த அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, கடந்த கால தேர்தலின் போது சட்டவிரோத மாக பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இந்தப் புகார் குறித்து சி.பி.ஐ. முதற்கட்ட விசா ரணையை தொடங்கி உள்ளது.

வரும் காலத்தில் தேர்தல் நடை முறைகளைச் சீர்குலைப்பதற்காக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயக நடைமுறை களின் புனிதத் தன்மையை பாது காக்கும் விவகாரத்தில் எவ்வித சமரசத்துக்கும் அரசு இடம் கொடுக்காது.

அவ்வாறு ஜனநாயக நடைமுறைகளுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து