இந்தியாவின் முதல் பயோ எரிபொருள் விமானம்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
-flight-plane-transportation

விமான எரிபொருளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், செலவை குறைக்கும் வகையில் பயோ எரிபொருள் மூலம் விமானத்தை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி பாம்பர்டியர் க்யூ400 என்ற வகை விமானத்தை பயோஜெட் எரிபொருள் மூலம் இயக்கி பரிசோதனை செய்தது.

நேற்று, டேராடூனில் இருந்து டெல்லி வரை இந்த விமானம் இயக்கப்பட்டது. இதில், சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேர் பயணம் செய்தனர்.  இந்தியாவின் முதல் பயோ எரிபொருள் விமான சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து