ஓகி புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 136 குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      தமிழகம்
cm edapadi present 2018 8 27

சென்னை : ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 136 குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலைவாய்ப்புக்கான ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

10 பேருக்கு...

ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி, நாகப்பட்டினம் தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் 136 குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் அரசு நிறுவனங்களில் பணி நியமன ஆணை நேற்று வழங்கப்பட்டது. அதனை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 10 பேருக்கு அரசு பணி நியமனத்திற்கான ஆணைகளை வழங்கினார்.

அமைச்சர்கள்...

இந்த விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் அதுல்யமிஸ்ரா, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை செயலாளர் கோபால், கலெக்டர்கள் சுரேஷ்குமார் (நாகை) பிரசாந்த் மு.வடநேரே ( கன்னியாகுமரி) மீன்வளத்துறை இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

துரித நடவடிக்கை...

கடந்த ஆண்டு தமிழகத்தை ஓகி புயல் தாக்கியது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலின் பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்தது. ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இவற்றை சரி செய்யும் பணியில் தமிழக அரசு துரிதமாக ஈடுபட்டதால் ஓரிரு நாட்களில் குமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் துரிதப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இந்த புயலால் மீனவர்கள் பலர் காணாமல் போயினர். அவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு உரிய உதவிகளையும், நிவாரண நிதியையும் வழங்கியது நினைவிருக்கலாம்.

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து