பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர அ.தி.மு.க.வுக்கு ஆட்சேபனை இல்லை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      இந்தியா
Tampiturai  2016 12 11

புது டெல்லி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டால் அ.தி.மு.க.வுக்கு ஆட்சேபனை இல்லை என்று பாராளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

அனைத்துக்கட்சி கூட்டம்

டெல்லியில் இந்திய தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகள் பங்கேற்றன. அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தி.மு.க. சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டனர்.

ஒப்புக் கொண்டால் ...

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது., அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்க வலியுறுத்தினோம்.

வாக்காளர் பட்டியலில் தகுதியான ஒருவர் பெயர் கூட விடுபடக் கூடாது எனக் கோரினோம். வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொண்டால் அ.தி.மு.க.வுக்கு ஆட்சேபனை இல்லை. மேலும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இல்லை.

பா.ஜ.க வும், தி.மு.க.வும் நெருங்கினால் அ.தி.மு.க.வுக்கு கவலையில்லை என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து