டெல்டா மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் - கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆய்வு

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      தமிழகம்
CM Palanisamy  department 2017 06 06

சென்னை, டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

ஆய்வுக் கூட்டம்...

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டப் பணிகள், குடிமராமத்து பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேற்கண்ட திட்டங்களுக்கான பணிகள் சரியான முறையிலும் விரைவாகவும் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார்,
 

அமைச்சர்கள்...

இந்த ஆய்வில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், டாக்டர் வி,.சரோஜா, காமராஜ், துரைக்கண்ணு, ஆர்.பி. உதயகுமார் ஆகியோரும் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பிரதீப் யாதவ் , திருவாரூர் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, நாகப்பட்டினம் கலெக்டர் சுரேஷ்குமார் நாகப்பட்டினம், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுனில் பாலிவால் ஆகியோர் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து