தேசியக் கொடியை தவறாக வரைந்து கிண்டலுக்கு ஆளான அதிபர் டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      உலகம்
Trump2018-08-28

ஓஹியோ,அமெரிக்க தேசியக் கொடியை அந்நாட்டு அதிபர் டிரம்ப் தவறாக வரைந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடுமையான கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

ஓஹியோவில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவமனைக்கு தனது மனைவி மெலனியாவுடன் சென்றார்  அதிபர் டிரம்ப். அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் அமெரிக்க தேசியக் கொடியை வரைந்த அதிபர் டிரம்ப், வெள்ளை நிறக் கோடுகளுக்கு பதிலாக நீல நிறத்திலான கோடுகளை போட்டிருந்தார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதால், கடுமையான விமரிசனத்துக்கு உள்ளானார். ஒரு நாட்டின் அதிபரே, அந்நாட்டின் தேசியக் கொடியை தவறாக வரைந்தால் எப்படி? என்ற கேள்வியுடன் கிண்டல்களும் தற்போது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து