மெக்கெயின் மரணம்: தேசியக் கொடி பறப்பதில் டிரம்ப் ஏற்படுத்திய குழப்பம்

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      உலகம்
Trump1 2018-08-28

வாஷிங்டன்,அமெரிக்காவில் ஆளும் குடியரசு கட்சியின் மூத்த தலைவரான மறைந்த ஜான் மெக்கெயின் மரணத்துக்கு அந்நாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில், அதிபர் டிரம்ப், தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடக் கூடாது என்று உத்தரவிட்டார்.

 

இதையடுத்து தேசியக் கொடி முழுக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. ஆனால் பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து தேசியக் கொடி மீண்டும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. வியட்நாம் போரில் சிறை சென்றவரும், அமெரிக்க அதிபர் பதவிக்கு இருமுறை போட்டியிட்டவரும், அரிசோனா மாநில செனட் உறுப்பினருமான ஜான் மெக்கெயின் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  அவரது இறுதிச்சடங்கு செப்டம்பர் 2-ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்கெயினும், அதிபர் ட்ரம்ப்பும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்த போது, டிரம்பை மெக்கெயின் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் மெக்கெயின் மறைவயொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அதிபரின் வெள்ளை மாளிகை, அந்நாட்டு நாடாளுமன்றம், ராணுவ தலைமையகமான பென்டகன், உச்ச நீதிமன்றம் போன்ற இடங்களில் உடனடியாக அமெரிக்க தேசியகொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. ஆனால் மெக்கெயின் மீது இருந்த அதிருப்தியால் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடக்கூடாது என அதிபர் டிரம்ப் திடீரென உத்தரவிட்டார். இதனால் தேசியக்கொடிகள் அனைத்தும் முழுக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் டிரம்புக்கு எதிராக விமர்சனங்களை பதிவிடப்பட்டது. இதையடுத்து வேறு வழியின்றி டிரம்ப், மெக்கெயினுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் வளர்ச்சிக்கு, மெக்கெயின் ஆற்றியுள்ள சேவைகளை மதிக்கிறேன். அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை அமெரிக்க தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து மெக்கெயினுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க தேசியகொடிகள் மீண்டும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து