பாக். ராணுவ தளபதியுடன் இம்ரான்கான் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      உலகம்
imran2018-08-28

இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஜாவத் பாஜ்வாவை, அந்த நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள இம்ரான் கான் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேசினார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ராணுவ தளபதி ஜாவத் பாஜ்வா மற்றும் இம்ரான் கான் இடையிலான அதிகாரப்பூர்வ சந்திப்பு இஸ்லாமாபாதிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், இந்தப் பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்காக இம்ரான் கானுக்கு தளபதி பாஜ்வா வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து