இந்திய அரசை மறைமுகமாக தாக்கி அமீரக பிரதமர் டுவிட்டரில் கருத்து

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      உலகம்
Sheikh Mohammed bin 2018-08-28

அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் டுவிட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்திய அரசை குற்றம்சாட்டி டுவிட் செய்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 700 கோடி மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கொடுப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து கேரளா மாநில முதல்வரும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
ஐக்கிய அரபு அமீரகம் கொடுக்க இருக்கும் 700 கோடி ரூபாயை மத்திய அரசு இந்தியாவிற்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு டுவிட்டுகளை வெளியிட்டு இருந்தார்.

அதன்படி இரண்டு விதமான அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். முதல்வகை அதிகாரிகள் நல்லவர்கள், அவர்கள் மக்களுக்கு உதவுவார்கள். மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதில் ஆனந்தம் காண்பார்கள். அவர்களின் உண்மையான சாதனை என்பது வாய்ப்புகளை அளித்து வாழ்க்கையை மாற்றுவதே.

அவர்கள் தீர்வுகளை அளிப்பார்கள். மக்கள் நலனையே எதிர்பார்ப்பார்கள் என்று முதல் டுவிட்டில் தெரிவித்துள்ளார்.
அடுத்த டுவிட்டில், இன்னொரு வகையான ஆட்சியாளர்கள், நல்ல விஷயத்தை தடுப்பார்கள், மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமாக்குவார்கள். மக்கள் அவர்கள் வீட்டு வாசலில் நிற்பதை பார்த்து ஆனந்தம் அடைவார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த இரண்டாவது டுவிட் இந்திய அரசை கிண்டல் செய்யும் வகையில் உள்ளதாக எல்லோரும் டுவிட் செய்துள்ளனர். முக்கியமாக மலையாளிகள், இது மத்திய அரசை அப்படியே குறிக்கிறது என்று கூறியுள்ளனர்.

இதனால் இந்த டுவிட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து