மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      தமிழகம்
mettur dam 2017 9 28

 மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 24 ஆயிரத்து 712 கனஅடியாக குறைந்தது.

கேரளா, கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஒரு மாதமாகவே அதிகரித்து காணப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்தது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 27 ஆயிரத்து 215 கனஅடியிலிருந்து 24 ஆயிரத்து 712 கனஅடியாக குறைந்தது. அணை நீர்மட்டம் 120.05 அடியாகவும், நீர் இருப்பு 93.55 டிஎம்சியாகவும் உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 24 ஆயிரத்து 215 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இந்தாண்டில் மேட்டூர் அணை மூன்று முறை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து