தி.மு.க. தலைவரானார் ஸ்டாலின் தொண்டர்கள் கொண்டாட்டம்

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      தமிழகம்
stalin 2018-08-28

சென்னை,தி.மு.க. தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை பொதுச் செயலாளர் அன்பழகன் முறைப்படி அறிவித்தார். தி.மு.க. பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வானார். இதன்மூலம், தி.மு.க.வின் 2-வது தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த தொண்டர்கள் ஆடிப் பாடியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் சாலை சென்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து