மோடிக்கு எதிராக அறிக்கை விட ஸ்டாலினுக்கு தைரியம் உண்டா? தம்பிதுரை சவால்

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      இந்தியா
Tampiturai1 2018-08-28

புதுடில்லி: தைரியம் இருந்தால் பிரதமர் மோடிக்கு எதிராக ஸ்டாலின் அறிக்கை விடட்டும் பார்க்கலாம் என தம்பிதுரை சவால் விடுத்துள்ளார்.. டில்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை தமிழக அமைச்சர் வேலுமணி, மற்றும் லோக்சபா சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவை நிதியை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர் தம்பிதுரை கூறியது, அ.தி.மு.க. முதுகெலும்பில்லாத கட்சி என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அ.தி.மு.க.வை குறை சொல்லும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை.

அ.தி.மு.க. விற்கு முதுகெலும்பிருக்கிறது. முன்னர் பா.ஜ. கூட்டணியில் இருந்த தி.மு.க. இப்போது மதவாதம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஸ்டாலினுக்கு துணிச்சல் இருந்தால் பிரதமர் மோடிக்கு எதிராக அறிக்கை விடட்டும் பார்க்கலாம்.

எதிர்கட்சி என்ற முறையில் ஆக்கப்பூர்வமான கருத்தை தி.மு.க. கூறினால் அதை நாங்கள் ஏற்க தயாராக உள்ளோம்.இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து