கொச்சி விமான நிலையத்தில் இன்று முதல் விமான சேவை

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
Kochi airport

கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் விமான நிலையம் கடந்த 15-ம் தேதி மூடப்பட்டது. கொச்சி கடற்படை தளத்தில் இருந்து மட்டும் ஒருசில விமானங்கள் இயக்கப்பட்டன. கொச்சி விமான நிலையத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி, சீரமைப்பு பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஆனதால் விமான நிலையத்தை திறப்பதும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 26-ம் தேதி விமான நிலையத்தை திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு அழைத்து வருவது உள்ளிட்ட சில சிக்கல்கள் காரணமாக மேலும் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டது. விமான நிலையம் மூடப்பட்டதால் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில்  கொச்சி விமான நிலையத்தில் இன்று முதல் விமான சேவை தொடங்கும் என்று விமான நிலையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து