தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
gold 2017 10 05

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 20-ம் தேதி ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 488 ஆக இருந்தது. பின்னர் விலை அதிகரித்து ஞாயிற்று கிழமை பவுன் ரூ.22 ஆயிரத்து 888-க்கு விற்றது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.22 ஆயிரத்து 848 ஆக இருந்தது.

நேற்று பவுனுக்கு ரூ.120 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 968 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,871-க்கு விற்பனையானது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் விலை மீண்டும் ரூ.23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.40.40-க்கு விபனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து