ஆக. 31, செப்.1-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை - மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      இந்தியா
heavy rain 2018 8 13

புதுடெல்லி : தமிழகத்தில் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை...

இதுதொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கர்நாடகத்தின் கடலோர மற்றும் தெற்குப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல, தமிழகத்தில் வரும் 31 மற்றும் 1-ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி, வைகை உள்ளிட்ட அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், கூடுதல் நீர் வரும் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மிக கனமழை...

இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அதனால் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்று ஒடிசா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து