ஆசிய விளையாட்டு போட்டி: ஆடவர் 800 மீட்டர் ஓட்டத்தில் மன்ஜித் சிங் தங்கம் வென்றார் ஜான்சனுக்கு வெள்ளி

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Spo - Manjith singh win Gold - Ram 29

 ஜகார்த்தா,ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று மாலை நடைபெற்ற ஆடவர் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. முதல் இரண்டு இடங்களை பிடித்து தங்கம் மற்றும் வெள்ளி வென்றுள்ளனர் இந்திய வீரர்கள்.

ஆடவர் 800மீட்டர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மன்ஜித் சிங் மற்றும் ஜின்சன் ஜான்சன் பங்கேற்றனர். அதில் மன்ஜித் சிங் போட்டி தூரத்தை 1:46.15 நிமிடத்தில் கடந்து முதல் இடத்தையும், ஜின்சன் ஜான்சன் 1:46.35 நிமிடத்தில் கடந்து இரண்டாம் இடமும் பிடித்தனர்.

மூன்றாம் இடத்தை கத்தாரின் அப்தல்லா அபூபக்கர் பிடித்தார். இதனால், ஒரே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது வரை 9 தங்கம், 18 வெள்ளி மற்றும் 22 வெண்கலம் வென்றுள்ளது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து