இந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம்: சுஷ்மா

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      உலகம்
sushma-swaraj 2107 10 16

ஹனாய் : இந்தியப் பெருங்கடலில் அமைதியை உறுதிப்படுத்த இந்‌தியா முன்னுரிமை தரும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரி‌வித்துள்ளார்.

வியட்நாம் தலைநகர் ஹனாயில் நடைபெற்ற இந்திய பெருங்கடலோர நாடுகளின் கூட்டத்தில் சுஷ்மா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உலக பொருளாதாரத்தின் உந்து ‌சக்தியாக கிழக்கு உலக நாடுகள் மாறி வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் இந்திய பெருங்கடலோர பகுதியில் அமைதி நிலவுவது அவசியம் என்று பேசினார். இந்திய பெரு‌ங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது தங்கள் கொள்கை அல்ல என்றும், இப்பகு‌தி நாடுக‌ள் நல்லுறவுடன் ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என்று‌ம் சுஷ்மா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து