மகளிர் குராஷ் விளையாட்டு:இந்திய அணிக்கு வெள்ளி, வெண்கலம்

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Spo - Bulhara win silver - Ram 33

 ஜகார்த்தா,மகளிர் பிரிவு குராஷ் விளையாட்டில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது.
இந்தியா சார்பில் பங்கேற்ற பிங்கி பல்ஹாரா வெள்ளியும், மலப்ரபா யல்லப்பா வெண்கலமும் வென்றனர்.

மகளிர் 52 கிலோ எடைப் பிரிவு குராஷ் விளையாட்டில் அரையிறுதியில் மலப்ரபா யல்லப்பா உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் வெண்கலம் வென்றார் அவர்.

அடுத்து, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பிங்கி பல்ஹாராவும் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இரண்டாம் இடம் பிடித்த இவர் வெள்ளி வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து