முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் தமிழகத்தில் நலத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் - கலெக்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு தற்போது நடந்து வரும் நலத்திட்ட உதவிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலெக்டர்களிடம் அறிவுறுத்தினார்.

ஆலோசனை...

பாராளுமன்றத்திற்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு மக்களிடம் ஆதரவு திரட்டி இந்த சாதனையை உருவாக்கினார். இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. தயாராகி வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் சில வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படும்படி கேட்டுக்கொண்டார்.

முதல்வர் உத்தரவு...

தற்போது தமிழகத்தில் நடந்து வரும் நலத்திட்ட உதவிகளை விரைந்து முடிப்பதற்கு கலெக்டர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறும் கலெக்டர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுடனும் தனித்தனியாக பேசி ஆய்வு நடத்துகிறார். மாவட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கிறார். குறிப்பாக குடிநீர், வீட்டு வசதி திட்டம், பொது வினியோக திட்டம், விவசாய கடன் மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிகிறார். இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் அறிவுறுத்தல்

வரும் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு முக்கிய திட்டங்களை ஓரளவிற்கு முடித்திருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். பெண்களுக்கான தாலிக்கு தங்கம் கொடுக்கும் திட்டத்தை தாராளமாக செய்ய கூறியுள்ளார். கிராமங்களில் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகளிலும் கலெக்டர்கள் கவனம் செலுத்துமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து