முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் ஒப்பந்தம் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது - அருண் ஜெட்லி

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான காங்கிரஸ் தலைவர் ராகுலின் குற்றச்சாட்டு சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார்.

டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விலை தொடர்பாக காங்கிரஸ் கட்சி விமர்சித்து வரும் புள்ளிவிவரங்கள் மிகவும் தவறானதாகும். கடந்த 2007 முதல் இந்த ஒப்பந்த நிர்ணயம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல், 7 வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விலைமதிப்பை தெரிவித்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது காங்கிரஸ் கட்சியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதைத் தான் காட்டுகிறது.

இதில் நாங்கள் ரூ.500 அளித்தோம், ஆனால் நீங்கள் ரூ.1,600 அளித்துள்ளீர்கள் என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான விவாதங்கள் எல்லாம், ராகுலுக்கு இந்த ஒப்பந்தம் குறித்து முழுமையாக எதுவும் தெரியாது என்பதை வெளிக்காட்டியுள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுலுக்கு என்ன தெரியும்? அதை எப்போதுதான் தெரிந்து கொள்வார்? சாதாரண விமானத்துக்கும், முழுமையாக வடிவமைக்கப்பட்ட விமானத்துக்கும் இடையிலான விலையை ஒப்பிட முடியுமா? ஒரு சாதாரண விமானத்துடன் முழுமையான போர் விமானத்தை ஒப்பிட முடியுமா? காங்கிரஸ் ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அது மக்களை எப்போதும் முட்டாளாக்கி விட முடியாது என்பதுதான். எனவே இந்த ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. இந்த விவகாரத்தில் தேவையற்ற வதந்திகளைப் பரப்புவதை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜெட்லி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து