ஐ.நா. உதவி பொது செயலாளராக இந்தியாவை சேர்ந்த திரிபாதி நியமனம்

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      உலகம்
Tripathi 2018 8 29

வாஷிங்டன் : ஐ.நா. சபையின் உதவி பொதுச் செயலாளராகவும், நியூயார்க்கில் உள்ள அந்த அமைப்பின் சுற்றுச்சூழல் திட்ட மையத்தின் தலைவராகவும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் வெளியிட்டுள்ளார்.

பொருளாதார வல்லுனரும், வழக்கறிஞருமான சத்யா திரிபாதி, ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கும் மேல் அந்த துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதிலும், ஐ.நா. சபையில் கடந்த 1998-ம் ஆண்டு முதல் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்து வருகிறார்.

ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நீடித்த வளர்ச்சி, மனித உரிமைகள் மேம்பாடு ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளிலும், திட்டங்களிலும் அவர் பங்கு வகித்தவர். வனங்களை அழிப்பதால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான ஐ.நா. சிறப்பு மையத்தின் இயக்குனராகவும், நிர்வாகத் தலைவராகவும் சத்யா திரிபாதி பதவி வகித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து