தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிக்கு செப். 25 வரை காவல்: லண்டன் கோர்ட்

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      உலகம்
Jabir Moti 2018 8 29

லண்டன் : பிரிட்டனில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி ஜபீர் மோத்தியை வரும் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி வரை காவலில் வைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் ஜபீர் மோத்திகைது செய்யப்பட்டார். இதையடுத்து, லண்டனின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் வான்ட்வொர்த் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில், லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜபீர் மோத்தி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மார்க் ஜப்பீட் முன்பு, வான்ட்வொர்த் சிறையில் இருந்து விடியோ கான்பரன்சிங் மூலம் ஜபீர் மோத்தி ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மார்க் ஜப்பீட், ஏற்கெனவே விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில், செப்டம்பர் மாதம் 25-ம் தேதி வரை ஜபீர் மோத்தியை காவலில் வைக்க உத்தரவிட்டார். அமெரிக்காவில் ஜபீர் மோத்திக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் பிரிட்டனில் இருந்து அமெரிக்காவுக்கு ஜபீர் மோத்தி நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளது.

SANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து