உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 4 பேர் பலி

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      இந்தியா
uttharkhand landslide 2018 8 29

டேராடூன் : உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 4 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகண்ட் மாநிலத்தின் கோட் எனும் கிராமத்தில் அமைந்துள்ள பூடா கேதார் என்ற பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து பேரிடர் மீடபுப் படை மற்றும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.  இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த அவர்களது உடல்கள் பத்திரமாக மீட்கப்பட்டது.  மேலும் 8 பேரின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனவே அவர்களும் இந்த இடிபாடுகளில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து