சமூக வலை தளங்களில் புரளிகளை பரப்புவதை தவிருங்கள்: பிரதமர்

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      இந்தியா
pm modi 2017 12 31

புது டெல்லி : ஒழுக்கமான சமூகத்தை ஏற்படுத்த ஒவ்வொருவரும், சமூக வலைத்தளங்கள் மூலமாக புரளிகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தனது மக்களவைத் தொகுதியான வாரணசிப் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய பிரதமர் மோடி, நம்மைச் சுற்றி ஏராளமான நல்ல விஷயங்கள் இருக்கும் போது சமூக வலைத்தளங்களில் நம் மூலமாக தவறான விஷயங்கள், புரளிகள் பரப்புவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் புரளிகள் பரவுவதைத் தடுக்க பயிற்சி எடுக்க வேண்டும், தூய்மை திட்டம் என்றால் மனத் தூய்மையும் அடங்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து