முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், வோஸ்னியாக்கி, பெட்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச், வோஸ்னியாக்கி, பெட்ரா க்விடோவா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றிபெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

வோஸ்னியாக்கி வெற்றி

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.  இதில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான டென்மார்க் நாட்டை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி, ஆஸ்திரேலியாவின் சாம் ஸ்டோசுரை எதிர் கொண்டார். ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய வோஸ்னியாக்கி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் சாம் ஸ்ரோசுரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

க்விடோவா வெற்றி

மற்றோரு ஆட்டத்தில் இரண்டுமுறை விம்பிள்டண் சாம்பியனான பெட்ரா க்விடோவா, பெல்ஜியன் வீராங்கனை யானினா விக்மாயரை எதிர் கொண்டார். தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய க்விடோவா 6-1, 6-4 என்ற நேர் செட்களில் விக்மாயரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஜோகோவிச் வெற்றி

இதேபோல் மற்றோரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கடந்த ஜூலையில் விம்பிள்டண் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச், ஹங்கேரியின் மார்டான் ஃபுக்சோவிக்ஸை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 3-6, 6-4, 6-0 என்ற புள்ளிக்கணக்கில் ஃபுக்சோவிக்ஸை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து