நெல்லித்தோப்பில் ஜெயலலிதா உருவச்சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      தமிழகம்
cm edapadi floor honor jayalalitha statue 2018 8 29

சென்னை : புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவச் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜின் மகன் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க திருக்கடையூர் செல்லும் வழியில், புதுச்சேரி ஜிப்மர் அருகில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநில அ.தி.மு.க. சார்பில், மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன், முதலியார் பேட்டை எம்.எல்.ஏ. பாஸ்கர், முத்தியால் பேட்டை எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லித்தோப்பு தொகுதி 100 அடி சாலையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, புதுச்சேரி மாநில ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர் ஓம்சக்தி சேகர், மாநில இணைச் செயலாளர்களான திருநாவுக்கரசு, காசிநாதன், துணைச் செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து